tamilnadu

img

இலங்கை தொடர்குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு

இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், 

இந்நிலையில் திங்களன்று வாகனத்தில் இருந்த வெடிபொருளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 இந்தியர்கள் 39 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ள. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் உள்ளது. 


;