tamilnadu

img

துடிப்பு மிக்க தோழர் ராமநாதனை இயக்கம் இழந்துள்ளது

மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி

செங்கல்பட்டு, ஆக. 14 - துடிப்புமிக்க தோழர் இ.ராமநாதனை இயக்கம் இழந்துள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புழஞ்சலி செலுத்தினார். மறைந்த தீக்கதிர் செய்தியாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரக்குழு  உறுப்பினருமான தோழர் ராமநாதனின் நினை வேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி வெள்ளி யன்று (ஆக.14) காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் சி.சங்கர்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோழர் ராமநாதனின் உருவப்படத்தை கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், துடிப்பு மிக்க இளம் தோழர் ராமநாதனை  கொரோனா என்ற கொடிய  நோய்க்கு இழந்தி ருப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு.  தோழர் ராமநாதன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சித்தோம். வேறு மருத்துவமனைக்கு மாற்ற இயலாது என்று மருத்துவர்கள் கூறியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பல ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு  போராளியை, சாதனையாளரை இழந்தி ருப்பது வேதனை அளிக்கிறது என்றார். 2001ம் ஆண்டு காஞ்சிபுரம் நகரமன்ற  உறுப்பினரான ராமநாதன், அங்கு நடை பெறும் ஊழல்களை அம்பலப்படுத்திய தற்காக கடுமையான தாக்குதலுக்கு உள்ளா னார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதும் அதிலிருந்து மீண்டு இயக்கப்  பணிக்கு வந்தார். கடந்த ஆண்டு காஞ்சி புரத்தில் ஆணவக்  கொலை செய்யப்பட்ட பெண் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அந்நி கழ்வை முழுவதும் ராமநாதன் ஒருங்கி ணைத்திருந்தார். காஞ்சிபுரத்தில் அனைத்து செய்தியாளர்களுடனும், நகர மக்களிடமும் செல்வாக்குடன் இருந்தார் என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்றால் துடிப்பு மிக்க தோழர்களை இழக்க வேண்டியுள்ளது. பலரை காப்பாற்றியுள்ளோம். ராமநாதனை இழந்துள்ளோம். அவரது குடும்பத்தை கட்சி பாதுகாக்கும். கார்ப்பரேட் மையமாகி வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழிலாளர் அமைப்பை, ராமநாதன் போன்று துடிப்புடன் செயல்பட்டு கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மதுக்கூர் ராமலிங்கம்

தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் குறிப்பிடுகையில், தீக்கதிர் நிருபராக திறம்பட செயல்பட்டு வந்த ராமநாதன், மக்கள்  பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு அவப்பெயர் இன்றி செயல்பட்டுள்ளார். தீக்கதிர் செய்தியாளர் என்று தன்னை கூறிக் கொள்வதில் பெருமைபட்டுக் கொண்டவர். செய்தி அனுப்புவது மட்டும் கடமை என்றில் லாமல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய சம்பவங்களை கொண்டு சென்று அவற்றிற்கு தீர்வு கண்டு வந்தார் என்றார். இந்நிகழ்வில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாவட்டச் செய லாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் இ.முத்துக்குமார், தீக்கதிர் சென்னை பதிப்பு தலைமை செய்தியாளர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.