tamilnadu

img

பணிக்கு வராதவர்களுக்கு ஊதிய பிடித்தம்: அஞ்சல் துறை ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை, ஏப்.18- ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நாட்களில்  பணிக்கு வராத அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதியம்  பிடித்தம் செய்யப்படும் என அஞ்சல் துறை கடிதம் அனுப்பியுள்ளதால், ஊழியர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில்  உள்ளது. இதன் காரணமாக பொதுப் போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளது. பால், மருந்தகம்,  அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள்,  காய்கறி சந்தைகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுத் துறை மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரு  நிறுவனங்கள் தங்களது ஊழியர் களுக்கு ஊதி யம் பிடித்தம் செய்யக் கூடாது, மேலும் பணியி லிருந்து நீக்கக் கூடாது என பிரதமரும், மத்திய  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக மும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத் தலைவர், அனைத்து அஞ்சல் துறை உயர்  அதிகாரிகளுக்கு ஏப்.16 ஆம் தேதி அனுப்பி யுள்ள கடிதத்தில், ‘ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வராத நாட்கள் ‘ஆப்சென்ட்’ என கரு தப்பட்டு ஊதியம் பிடித்தம் செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் அஞ்சல் துறை ஊழி யர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருக்கும் ஊழியர்களைக் கொண்டு அத்தி யாவசியப் பணிகள் பாதிக்கப்படாமல் பணி யாற்றுங்கள் என்றுதான் உத்தரவிடப்பட்டு உள்ளது.  போக்குவரத்து வசதி இல்லாததால், சிலர் வேலைக்கு வரமுடியாத சூழல் உள்ளது. ஊழியர்க ளின் ஊதியத்தில் பிடித்தமோ, பணி நீக்கமோ செய்யக்கூடாது என பிரதமர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அஞ்சல் துறைத்  தலைவரின் இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியளிக்கி றது என்று ஊழியர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

;