tamilnadu

img

‘இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடிய அமைச்சர்’

உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த திமுக

சென்னை, பிப்.18- சட்டப்பேரவையில் தவறான தகவலை  அளித்ததாக கூறி அமைச்சர் பாண்டிய ராஜன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்ன ரசு உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார்.  தமிழக சட்டப்பேரவையில் செவ்வா யன்று(பிப்.18) கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர்  பாண்டியராஜன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல்  பிரச்சனை கொண்டு வந்தார். அதற்கு பேர வைத் தலைவர் ப.தனபால் அனுமதி யளித்தார். அப்போது பேசிய தங்கம் தென்னரசு, “கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடை பெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொட ரின்போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது என்பது சாத்தியம் அல்ல என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். அப்போது  அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கிட்டு பேசுகையில் இரட்டை குடியுரிமை சாத்தியம்தான். அது வழங்கப்படும் என்ற முறையில் கூறினார். ஆனால், இந்திய குடியுரிமை சட்டம் 1955-ன் அடிப்படையில் இரட்டை குடியுரிமை வழங்கக்கூடிய வாய்ப்பே கிடையாது. அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்ததை சுட்டிக் காட்டினார்.

இலங்கை தமிழர்களாக தமிழகம் வந்து  பல்வேறு துயரங்களை அனுபவித்து வரு கிறார்கள்.எனவே, அவர்கள் சட்டவிரோத மாக குடியிருக்கிறார்கள் என்ற சட்ட விதியை நீக்கி நமது நாட்டில் இப்போது இருக்கும் குடியுரிமை சட்டத்தின் அடிப்ப டையிலேயே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே இலங்கைத் தமி ழர்களுக்கான நியாயமான கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ‘இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடிக் கொண்டிருப்பதைப்போல்’ அமைச்சர் பாண்டியராஜன் வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கம் கற்பிக்கும்  வகையில் ஒரு தவறான தகவலை பதிவு  செய்திருக்கிறார். எனவே, அவர் மீது உரிமை  மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.