tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்

சென்னை, மார்ச் 2- நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு  வாக்காளர் பட்டியலை வரும் 20 ஆம் தேதி வெளி யிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்,  உறுப்பினர்கள் பதவிக்கும் புதிதாக பிரிக்கப் பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவி களுக்கும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணை யம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், வரைவு வாக்குச்சாவடி பட்டி யலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து  அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநக ராட்சி துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை நடத்தினார். இதில், இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மார்ச்  6 ஆம் தேதி வெளியிடவும் ஏப்ரல் மாத இறுதிக்குள்  தேர்தல் அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.