tamilnadu

img

உ.பி. பாஜக அரசு மீது அகிலேஷ் குற்றச்சாட்டு

ரகசியங்கள் வெளியாகாமல்  தடுக்கவே துபே என்கவுண்ட்டர்!

கான்பூர், ஜூலை 10- உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூ ரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில், உத்தரப்பிர தேச போலீசாரால் தேடப்பட்டு வந்த வர் பிரபல ரவுடி விகாஸ் துபே. 5 நாள் தேடுதலுக்கு இடையே, துபே வை வியாழனன்று உஜ்ஜைனியிலுள்ள காலபைரவர் கோயிலில், மத்தியப்பிர தேச போலீசார் கைது செய்தனர். என் கவுண்ட்டரைத் தவிர்க்க, துபே, அவரா கவே போலீசாரை வரவழைத்து சரண டைந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதனிடையே, துபேவை கான்பூ ருக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது, வியாழனன்று காலை 7 மணியள வில், துபே இருந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக வும், இந்த வாய்ப்பை பயன்படுத்திய துபே, போலீசாரின் துப்பாக்கியை பறித்து தப்ப முயலவே, அவரை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் உ.பி. காவல் துறை அறிவித்துள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட் டர், திட்டமிடப்பட்ட சம்பவம் என்று உத்த ரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வ ரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டி யுள்ளார்.  “விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ரகசியங்க ளால் கவிழ்க்கப்படுவதில் இருந்து உ.பி. அரசாங்கம் காப்பாற்றப்பட்டு உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

;