tamilnadu

img

12-ஆம் வகுப்பு தேர்வு துவங்கியது

8.36 லட்சம் மாணவர்கள் எழுதினர்

சென்னை, மார்ச் 2- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திங்களன்று (மார்ச் 2)  தொடங்கியது. 7 ஆயிரத்து 276 மேல் நிலைப்  பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து  612 மாணவிகள், 3 லட்சத்து 74 ஆயிரத்து 747  மாணவர்கள், 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர் கள், 62 சிறைக் கைதிகள் மற்றும் 2 திருநங்கை யர்கள் உட்பட மொத்தமாக 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,012 தேர்வு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 160 மையங்களில் 47  ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர்.

மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடை பெறும் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவ டைந்தது. முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், அடுத்த 5 நிமிடம் மாணவர்க ளின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுய விவரங்களை சரிபார்க்கவும் அளிக்கப் பட்டது. பிறகு, காலை 10.15 மணி முதல்  மதியம் 1.15 மணி வரை 3 மணி நேரம் மாண வர்கள் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி களுக்கு மட்டும் ஒருமணி நேரம் கூடுதலாக நேரம் வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பாண்டு பொதுத்தேர்  வில் முறைகேடுகளை தடுக்க தனித்தேர்  வர்களுக்கு பிரத்யேக தேர்வு மையங்கள்,  பழைய மற்றும் புதிய பாடத்திட்ட குழப் பத்தை தவிர்க்க வெவ்வேறு நிறங்களில் வினாத்தாள்கள் உட்பட பல்வேறு புதிய  மாற்றங்களை தேர்வுத்துறை முன்னெ டுத்துள்ளது. இதுதவிர தேர்வு மைய முதன்மை கண்  காணிப்பாளர்கள், துறை அதிகாரிகள் செல்போன் பயன்படுத்தவும், மாணவர்க ளின் விடைத்தாள்களை பிரித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மாண வர் வருகைப்பதிவு உட்பட விவரங்களை தரைவழி தொலைபேசி மூலம் மட்டுமே மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அறை கண்காணிப்பாளரே விடைத்  தாள்களை பிரித்து வைக்கவும் தேர்வுத்  துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் 41,500 ஆசிரியர்கள் அறை  கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 296 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்  கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு பறக்கும்  படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 24 ஆம் தேதியுடன் முடிவடையும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.