150 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் மத்திய அரசு ‘இந்தியாவை பாதுகாப்போம்’ இயக்கம் தொடங்கியது
சென்னை, ஆக.8- இந்திய தொழிலாளி வர்க்கத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்லும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து சனிக்கிழமையன்று (ஆக.8) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை மற்றும் கனிம வளங் கள் தனியார்மயம், முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்க சட்டங்கள் திருத்தம், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு ஆகியவற்றோடு விவசா யத்தை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அந்நி யர்களும் ஆதிக்கம் செலுத்தும் வகை யில் மத்திய அரசு கொள்கை அமைந் துள்ளது.
இதனைக் கண்டித்து ‘வெள்ளை யனே வெளியேறு’ இயக்கம் துவங் கிய ஆகஸ்ட் 9 ஆம் தேதி, நாடு முழு வதும் ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்று முழக்கத்தோடு போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. ஆகஸ்ட் 9 அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவெடுக்கப் பட்டது. அதன்படி தமிழகம் முழு வதும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் போக்கு வரத்து, ஆட்டோ, கட்டுமானம், தையல், முறைசாரா, சுமைப்பணி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என சகல தரப்பினரும் கலந்து கொண்ட னர். ஆலை வாயில்கள், அரசு அலு வலகங்கள், தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகள், பணிமனைகள், வீதிகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் போராட்டங்கள் நடை பெற்றன.
சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கே.ஆறுமுக நயினார் (சிஐடியு), ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), டி.எம்.மூர்த்தி, சி.எச்.வெங்கடாச்சலம் (ஏஐடியுசி), கி.நட ராஜன் (எல்பிஎப்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி கூறுகையில், “44 தொழிலா ளர் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்று கிறது. இதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் அலுவலகத்தின் கருத்துக்கு எதிராக நிலைக்குழு கருத்து தெரிவிப்பதால், அதனை நிராகரிக்கிறோம் என்று கூறி யுள்ளனர். ஊரடங்கை பயன்படுத்தி சீர்திருத்தம் என்ற பெயரில் சீர் குலைவு வேலை செய்கின்றனர். வேலை, ஊதியத்திற்கு நிரந்தர மற்ற நிலை உள்ளது. எதிர்கால பணப் பயன்களும், ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதமில்லை என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்றார். பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விற்கப்படுகிறது. உலகிலேயே அதிக வேலைவாய்ப்பு வழங்கும் இரண்டாவது பெரிய நிறு வனமான ரயில்வேயை விற்கிறார் கள். 109 வழித்தடங்கள், 600-க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்கள் தனி யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளை சிறிதுசிறிதாக தனி யார்மயமாக்கி வருகிறார்கள். நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்து விட்டு, இந்தியாவை ஒட்டுமொத்த மாக விற்று வருகிறது. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று 30 கோடி மக்கள் இந்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.