tamilnadu

img

சிபிஎம் தலைவர்கள் மீது ஆர்எஸ்எஸ் கொலைவெறி தாக்குதல்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதால் ஆத்திரம்

நாகர்கோவில், ஏப்.20- ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து உதவி வரு வதை தடுக்கும் நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கொரோனா அச்சத்துடனும் உண வின்றியும் தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள், உணவு மற்றும் அரிசி உள் ளிட்ட காய்கறி போன்ற உணவுப் பொருட் களை வழங்கி வருகின்றனர். தமிழ் நாடு முழுவதும் நடந்து வரும் இத்த கைய மனிதாபிமான பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்களும் உதவி வரு கின்றனர். களப்பணியில் தன்னலம் கருதாத ஆயிரக்கணக்கான செங் கொடி புதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின் றன. குறிப்பாக குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி களுக்கும் அவர்களை கவனிப்போ ருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு வாரங்க ளாக உணவு வழங்கி வருகின்றனர். அதோடு நல்லெண்ணம் கொண்ட பல்வேறு பகுதியினர் ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க சிபிஎம் ஊழியர்களை நம் பிக்கையோடு அணுகி வருகின்ற னர். அதன் மூலம் தினம் தோறும் காய் கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள் அடங்கிய பைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒப்படைக்கப் பட்டு வருகின்றன. மக்கள் சேவகர் களாக வேடம் தரித்துள்ள ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பினருக்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த பணிகளில் முன்னிலையில் உள்ள சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் சசிகுமாருக்கு தென்காசி, கோவில்பட்டி போன்ற வெளியூர்களிலிருந்து ஆர்எஸ்எஸ் காரர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். அருமனை அருகில் உள்ள கிளாத்தூ ரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நபர் பிபின் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பே சசிகுமாரை மிரட்டியுள்ளார். ஆர்எஸ்எஸ் ஒன்றிய செயலாளரான இவரது தூண்டுதலால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருவதை பிபினின் குடும் பத்தினரிடம் சசிகுமார் தெரிவித்துள் ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிபின் திங்கன்று காலை சசிகுமாரை தாக்கி யுள்ளார். இதில் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ள சசிகுமார் தக்கலை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். உள்நோயாளியாக சிகிச்சை பெறவேண்டிய நிலையில் கொரோன சிகிச்சைக்கான முன்னு ரிமை கருதி மருத்துவர்கள் கையில் கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி யுள்ளனர். சசிகுமாரை தாக்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிய பிபினை வழக்கறிஞரும், அண்டு கோடு தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கி தலைவருமான எஸ்.வி. அனூப் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தி அருமனை காவல் துறையினரிடம் ஒப்படைத் தா. அப்போது அனூப் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வ தாக பிபின் மிரட்டியுள்ளார். அதன் பிறகு குழித்துறை மருத்துவமனை யில் உணவு விநியோகம் முடிந்து திரும்ப முயன்ற அனூப்பை மரு தங்கோட்டைச் சேர்ந்த சேகர் தலை மையிலான சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதில் படு காயம் அடைந்த அனூப் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். 

சிபிஎம் கண்டனம்

சிபிஎம் ஊழியர்கள் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் திட்டமிட்டு நடத்திய தாக் குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலா ளர் ஆர்.செல்லசுவாமி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். குற்றவாளி களை கைது செய்வதோடு உண்மை யான மக்கள் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் வேண் டுகோள் விடுத்துள்ளார்.