tamilnadu

img

அரசாணை வெளியீடு

சென்னை,ஏப்.9- கொரோனா உதவி நிதியாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் கடந்த 6ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்த படி 15 அமைப்புகளைச் சேர்ந்த பதிவு செய்த 14 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க தொழிலாளர் துறை  ஆணையம் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் 1 லட்சத்து 58 ஆயிரத்துக்கு மேற்பட்ட தெரு வியாபாரிகளுக்கு உதவித் தொகை  வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எஞ்சிய 13 லட்சத்துக்கு மேற்பட்ட பதிவு செய்த  தொழிலாளர்களுக்காக 130 கோடியே 12 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.