tamilnadu

img

ஆண்டிபட்டியில் போஸ்டர் யுத்தம்... போஸ்டரை கிழித்த அதிமுகவினர்.. மீண்டும் ஒட்டிய விஜய் ரசிகர்கள்....    

ஆண்டிபட்டி 
நடிகர் விஜய்க்கு ஆதரவாக மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் பல்வேறு வாசங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டினர். குறிப்பாக தேனி பகுதியில் சற்று வித்தியாசமாக எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை மார்பிங் செய்து விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை சேர்த்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். விஜய ரசிகர்ளின் இந்த செயலால் துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சிலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் விஜய் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. "வருங்கால முதல்வரே" என்ற வாசகங்களுடன் இருந்த சில போஸ்டர்களை அதிமுகவினர் மற்றும் போலீசார் அகற்றினர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீண்டும் போஸ்டர் அடிக்க ஆரம்பித்து நள்ளிரவில் ஒட்டினர். அந்த போஸ்டர்களில்‘‘தமிழ் சினிமாவில் கலெக்‌ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்‌ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான், தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் "மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு... எப்போது மக்கள் இயக்க அரசியல்..." என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆண்டிபட்டி நகரின் முக்கியமான இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அதனை போலீசாரின் உதவியுடன் அதிமுகவினர் கிழித்தனர். போலீசார்  கிழித்து அப்புறப்படுத்தினாலும் நாங்கள் போஸ்டர் அடிப்போம் என விஜய் ரசிகர்கள் அடுத்த வசனத்துடன் போஸ்டர் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தேனியில் வித்தியாசமாக போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது. 

;