tamilnadu

சம்பள நிலுவைத் தொகையை வழங்குக : பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா

சம்பள நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். பி.எஸ்.என்.எல் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளியாட்களிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும். ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பி.எஸ்.என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து சமூக  இடைவெளியைக் கடைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடை பெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். பாஸ்கரன் மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், பல்லடம் கிளை தொலைபேசி அலு வலகம் முன்பாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பிஎஸ்என்எனல் ஊழியர் சங்க நிர்வாகிகள் சங்கிலிதுரை மற்றும் ரகு ஆகியோர் தலைமை ஏற்க ஒப்பந்தத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சேலம்
சேலம் செவ்வாய்பேட்டை பிஎஸ்என்எல் அலுவல கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் கோபால், ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஒப் பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி
உதகையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.விஜய குமரன் தலைமை தாங்கினார். இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். குன்னூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் லியோ கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜேக்கப் மோரிஸ் துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட பொருளாளர் பிரின்ஸ், ஒப் பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கென்னடி, அலுவலக ஊழியர் கிளை செயலாளர் கே.ஆர்.ரவி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் திர ளாக கலந்து கொண்டனர். கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் கிளை செயலாளர் அருள் செல்வன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்கத் தின் கிளை தலைவர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து பேசி னர். இதில் ஒப்பந்த ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் பொள் ளாச்சி கிளை செயலாளர் ஓ.இராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலர் கே.அண்ணா துரை வரவேற்று பேசினார். இதனையடுத்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் பொள்ளாச்சி வட்ட கிளை செயலாளர் ஆர்.பிரபாகரன் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழி யர் சங்கத்தின் பொள்ளாச்சி கிளை பொறுப்பாளர் எஸ். மனோகரன், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி ஆகியோர்  போராட்டத்தினை விளக்கி உரையாற்றினர்.  பின்னர் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் பொள்ளாச்சி கிளை பொறுப்பாளர் வி.சசிதரன், எம்.ஜெபமணி ஆகியோர் தர்ணா போராட்டத்தினை வாழ்த்தி உரையாற்றினர். முடிவில் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் பொள்ளாச்சி கிளை செயலாளர் என்.சிவசாமி நன்றி கூறினார்.

;