tamilnadu

img

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம்: முதல்வர்

சென்னை, ஜூலை 20- அணை பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக  தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டு வரும் அணை  பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாதுகாப்பு என்ற பெயரில் அணை களை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வரு கிறது. எனவே, இந்த மசோதாவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அணை பாதுகாப்பு மசோதா தமிழ கத்திற்கு ஏற்புடையது அல்ல. இந்த மசோதாவை திரும்பப் பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். முல்லைபெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் மீதான தமிழகத் தின் உரிமையை நிலை நாட்ட தமிழக அரசு குரல் கொடுக்கும். அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தும்” என்றார்.