tamilnadu

img

இந்திய படப்பிடிப்புகளுக்கு சலுகை

மொரிஷியஸ் துணைப்பிரதமர் பேட்டி

சென்னை,பிப்.22- மொரிஷியஸ் நாட்டில் திரைப்பட படப்பிடிப்பு நடத்தி னால் இந்திய திரைத்துறையின ருக்கு அங்குள்ள கட்டணத்தில் 40 விழுக்காடு தள்ளுபடி செய்  யப்படும் என்று  மொரீஷியஸ்  துணைப் பிரதமர்  லீலாதேவி டூக்குன் லுச்சூமுன்  தெரி வித்துள்ளார். சென்னையில்  சமனர்கள் சர்வ தேச தொழில்கூட்டமைப்பு (ஜிட்டோ)  ஏற்பாடு செய்திருந்த  வர்த்தக மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்க ளிடம் அவர் பேசினார். இந்தியா- மொரிஷியஸ் வர்த்தகம் சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. மொரிஷியஸ் நாட்டில் உயர் கல்வி கற்க இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து மாணவர்கள் வருகிறார்கள். எங்களது நாட்டில் உள்ள இரு  மருத்துவக்கல்லூரிகள் சிறந்த  மருத்துவக்கல்வியை அளிக் கின்றன.

மொரிஷியஸ் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. பல அரியமற்றும் அழகான தீவுகளை கொண்டுள் ளது. இங்கு இந்திய திரைப்படத் துறையினர் சினிமா படப்பிடிப்பு நடத்தினால் அதற்காகும் கட்ட ணத்தில் 40 விழுக்காட்டை தள்ளு படி செய்வோம் என்றார் அவர். முன்னதாக ஜிட்டோ 360  மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய லீலா தேவி இந்திய தொழில்நிறுவனங்கள் மொரிஷி யஸ் நாட்டில் தொழில்தொடங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமது நாடு  அளிக்கும் பல்வேறு முதலீட்டு சலுகைகளையும் அவர் விளக்கினார். இந்த மாநாட்டில் ஜிடோவின் தலைவர், அபெக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஸ்ரீகண்பத் ராஜ்  சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.