tamilnadu

img

7 மாதமாக ஊதியம் இல்லை: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 27- 7 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரி திங்க ளன்று (ஜூலை 27) மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம  ஊராட்சிகளில் பணிபுரியும துப்புரவு பணியாளர்கள்,  டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோ ருக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் பணி செய்தற்கு கூட  ஊதியம் வழங்காமல் உள்ளது. இதனால் கடும் வறு மையில் ஊழியர்கள் வாடுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில்  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் பேசிய மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, அடுத்த 10  நாட்களில் நிலுவை தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்துவதாக உறுதியளித்தார். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில்  சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார்,  மாவட்ட துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி, சங்க  நிர்வாகிகள் தேவராஜ், நித்தியா, ஆனந்தன், யூதாஸ்,  குமரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

;