tamilnadu

img

எந்த ஆலையும் மூடவில்லையாம்: அமைச்சர்

சென்னை,பிப்.18- தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் மனோதங்கராஜ்,“நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பு “ இந்தியா ஒரு சமத்துவ மதச்சார்பற்ற குடியுரிமை பெற்ற நாடு” என்று கூறியுள்ளது. அந்த அடிப்படைகோட்பாட்டில் எள் முனை அளவும் சேதாரம் ஏற்படவிடமாட்டோம்” என்றார். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்தை கொண்டு வருவதை  தடுத்து நிறுத்துவோம். தமிழக சட்டமன்றத்திலும் சிஏஏ,என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக வைத்து தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் வாழும் அனைத்து மக்களின் கோரிக்கைக்காக போராடி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை என்பது ஏழை நடுத்தர மக்களின் வாழ்வை முன்னேற்ற, வருமானத்தை அதிகரிக்க செய்யும் திட்டங்கள் ஒன்று இல்லை என்பதால் ஒரு சாமாயனின் பார்வையில் வேதனையை தருகிறது என்றும் மனோதங்கராஜ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான சிறு-குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மூடிய ஆலைகளை திறக்க, வேலைவழங்க நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிப்புகள் இதுவும் இல்லை. அப்போது குறுக்கிட்ட அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின்,“தேசிய அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் தமிழகம் தொழிற்துறையில் முதலீடு செய்யும் மாநிலமாக இருந்து வருகிறது. மாநிலத்தில் எந்த தொழிற்சாலையும் மூடப்படவில்லை என்றும் கூறிக்கொண்டனர்.