மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நத்தம், ஜூன் 1- திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் மின்வாரிய அலுவலகம் முன்பு மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, மின் வினியோகத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது, மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது. மின்சார சட்டதிருத்த மசோதா 2020 வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பாக திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஏலக்காய் மின்னணு ஏல விற்பனை மையம்
போடியில் தொடங்க அனுமதி
தேனி, ஜூன் 1- ஸ்பைஸ் வாரியம் சார்பில் போடியில் ஏலக்காய் மின்னனு ஏல விற்பனை மையத் திற்கு தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பல் லவி பல்தேவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் போடிநாயக்க னூர் வட்டாரத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏலக்காய் விவசாயிகளின் மின்னணு ஏல விற்பனை மையம் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டடிருந்தது. இதனைத் தொடர்ந்து நறுமணப் பொருள்கள் வாரியம், கொச்சி கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், ஏல விவசாயிகள், ஏலக்காய் ஏலம் எடுப்போர், ஏல வியாபாரிகள், ஏல விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி மின்னணு ஏல விற்பனை மையம் செயல் பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நறு மண வாரியம் வழங்கும் அட்டவணைப் படி, நாள் குறிப்பிட்டு ஏலம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏலக்காய் பயிரிடும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.
இரு கண்மாயை தூர்வார ரூ.70 லட்சமாம் தொடங்கியது
மராமத்துப்பணி
திருவில்லிபுத்தூர், ஜூன் 1- திருவில்லிபுத்தூர் வட்டம் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கண்மாய்களும் மழை காலம் துவங்க இருப்பதால் குடிமராமத்துப் பணி களை மேற்கொள்ள அரசு உத்தரவிட் டுள்ளது. அதனடிப்படையில் முள்ளிக் குளம் பெரிய குளம் கண்மாய விழுப்ப னூர் கண்மாய் ஆகிய இரண்டு கண்மாய் களில் குடிமராமத்து பணிகள் திங்களன்று தொடங்கின. தலா ரூ.35 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது பணிகளை திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் நிலவள வங்கித் தலைவர் முத்தையா, முள்ளிக்குளம் ஊராட்சித் தலைவர் மணிமாலா, விழி ப்பனூர் ஊராட்சித்தலைவர் தமிழ்ச்செல் வன் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் ராஜா, உதவிப் பொறியாளர் முஹைதீன்ஆரிப் ரகுமான், சாமிநாதன், சிவராம், குமார் ஒப்பந்ததாரர் ஜோதி மற்றும் தங்கமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிவாரண உதவி வழங்கல்
திருவில்லிபுத்தூர், ஜூன் 1- திருவில்லிபுத்தூரை அடுத்துள்ள உள்ளூர் பட்டி துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 106 மாண வர்கள்படித்து வருகிறார்கள் தற்போது கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்தில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குழந்தை களின் உணவுத் தேவையை உறுதிப் படுத்த தலைமையாசிரியர் மற்றும் ஆசி ரியர்கள் இணைந்து அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை திங்களன்று வழங்கினார் இந்நிகழ்வில் உதவிக் கல்வி அலுவலர் சீனிவாசன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பீஹார் பயணம்
விருதுநகர், ஜூன்.1- விருதுநகர் மாவட்டத்தில் தனியார் உணவு விடுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயிலில் விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 250 பீஹார் தொழிலாளர்கள் திங்கள்கிழமை புறப் பட்டுச் சென்றனர்.