tamilnadu

img

“பாதிக்கும் மேற்பட்டோர் குணமாகிவிட்டனர்”

கொரோனா குறித்து அமைச்சர் பேட்டி

மதுரை, ஜூலை 18- மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 8,103ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதா வது:- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நான்கு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் நான்கு பேருமே குணமடைந் துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தடுப்பு மருந்துகள் மூலம் இதுவரை பாதிக்கும் மேற்பட்டோரை குணப்படுத்தியுள்ளோம். தேவைக்கேற்ப படுக்கை வசதிகள், செயற்கை சுவாச கருவிகள் தயார் நிலையில் உள்ளது. இதற்காக 76 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளே சவாலாக எதிர்கொள்ளக்கூடிய இந்த நோய்த் தொற்றில் தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்தவித பிரச்சனையும் இல்லை. தனியார் மருத்துவமனை கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வாங்குகிற பட்சத்தில் நிரூபித்தால் உறுதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிமுகவில் இதுவரை நான்கு அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கிறார்கள் என்ற கேள்விக்கு? பதிலளித்த அமைச்சர், “அரசு மருத்துவ மனைகளில் உயர் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொ ருவருடைய மனநிலையைப் பொறுத்து தான் அவர்கள் முடிவு எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறி சமாளித்தார்.