தஞ்சாவூர், ஜூன் 19- இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளில் பணியாற்றியவரும், மக்கள் குரல் நாளிதழ் சென்னைப் பதிப்பு உதவி ஆசிரியருமான சிவா என்ற ஆர்.சிவகுமார் (வயது 49) மார டைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தஞ்சாவூர் ரெட்டிப் பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகரில், அன்னாரது இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சிவகுமாருக்கு, மனைவி மீனாம்பிகை. மகன் அபய் பிரபு (13) ஆகியோர் உள்ளனர்.