tamilnadu

img

இதுவரை எத்தனை மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன?

உயர்நீதிமன்றம் கேள்வி-பதிலளிக்க ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை,ஆக.12- இதுவரை எத்தனை மணல் கடத்தல்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்க்ல செய்த  பொதுநல மனுவில்,  தூத்துக்குடி மாவட்டம் குலசேகபட்டினத்தை சேர்ந்த கடலோர கிராமங்களான உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் இயற்கை நீர்வள ஆதாரங்கள் தினமும் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் சவுடு மணல் எடுப்பதாக அனு மதி பெற்று அதிகளவிலான மணல் எடுக்கின்ற னர். உயர்நீதிமன்ற மதுரை கிளை சவுடு மணல் எடுக்க அனுமதிக்ககூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், இதுபோன்று அனுமதி வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல. உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் மணல் கடத்த லை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப் போது, சட்டவிரோத மணல்கடத்தலை தடுக்கக் கோரி தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்த வண்ணம் உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில், தமிழக அரசின் தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உடன்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் எடுப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்கு கள் பதிவு செய்யப்பட்டது? அந்த வழக்கு விசா ரணையின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;