tamilnadu

img

ஆளுநர் உரை கிழிப்பு ஜெ.அன்பழகன் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை

சென்னை, ஜன. 7- ஆளுநர் உரையை கிழித்து எறிந்த தால் திமுக சட்டப்பேரவை உறுப்பி னர் ஜெ.அன்பழகன், நடப்பு கூட்டத்  தொடரில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம்  புதனன்று (ஜன. 7) நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. பிறகு ஆளுநர் உரை மீதான விவா தம் தொடங்கப்பட்டது. அப்போது எம்எல்ஏ ஜெ.அன்பழ கன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு  சரியில்லை எனவும், உள்ளாட்சித்  தேர்தல் முறையாக நடைபெற வில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகரின் இருக்கையில் போட்டார்.

இதையடுத்து அவை நடவ டிக்கைக்கு குந்தகம் விளைவித்த தாகக் கூறி அன்பழகனுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ. அன்பழகன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அன்பழகன் கூறுகையில், மறைந்த ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது, பட்ஜெட்டை கிழித்து  அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு போட்டார். அது எனக்கு ஞாப கம் வந்ததால் ஆளுநர் உரையை கிழித்துப் போட்டேன். ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்த தும் சரிதான். தமிழகம் எதில் முதலிடம் என கேட்ட தற்கு முதல்வர் பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்  சனை தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. உயர்நீதிமன்ற கண்டனத்தில் தமிழ கம் முதலிடம் பிடித்துள்ளது என்றார்.

மேலும் என்னை அவையில் பேச  விடவில்லை. ஒரு மணி நேரத்தில் 5  நிமிடம்தான் பேசினேன். 55 நிமிடங்  கள் ஆளுங்கட்சி அமைச்சர்கள்தான் பேசினார்கள். நான் இனி பேசக் கூடாது என பேரவைத் தலைவர் கூறி னார். இது ஆளுநர் உரை அல்ல, கிழிக்க வேண்டிய உரை எனக்கூறி கிழித்துப் போட்டேன் என்றார். முன்னதாக ஜெ.அன்பழகன் நடந்துகொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பேரவையில் எதிர் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி னார். ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்  களும் ஒருமையில் பேசி இருக்கி றார்கள் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தனிப்பட்ட முறையில் ஒருவரை  தரக்குறைவாக பேசும்பொழுது யாராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படுவது மனித இயல்புதான். அந்த அடிப்படையில்தான் அமைச்சர் அப்படி நடந்துகொண்டார். அது  ஒன்றும் தவறல்ல என்று முதலமைச்ச ரும் துணை முதலமைச்சரும் தெரி வித்தனர். தொடர்ந்து பேசிய அன்பழகன் பேச்சுக்கு அமைச்சர்கள் அடிக்கடி  குறுக்கீடு செய்து கொண்டிருந் தார்கள் இதனால் மீண்டும் கூச்சல்  குழப்பம் நிலவியது. அப்போது  ஆளுநர் உரையை கிழித்தெரிந்த தால் அன்பழகனை பேரவை யின்கூட்டத்தொடர் முழுவதும் நீக்கு வதாக பேரவைத்தலைவர் தனபால் கூறினார். இது ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதித் திட்டம் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார்.

;