tamilnadu

img

கல்கேரி சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை-நிலம்-வீடு... சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள கல்கேரி கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்திற்கு அரசு சார்பில் உதவி அளிக்கப்படும் என்று  உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

படுகொலை தொடர்பான வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட் டம், அழுத்தம் காரணமாக தற்போது சி.சுரேஷ் குடும்பத்திற்கு உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரம், குழந்தைகள் படிப்புச் செலவுகள், சுரேஷ் மனைவி ராஜம்மாவுக்கு அரசுப் பள்ளியில் சமையலர் வேலை, தொகுப்பு வீடு, சட்டப்படி நிலமும் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.இந்தத் தகவலை சுரேஷ் குடும் பத்தாரிடம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தெரிவித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன் கூறுகையில்," 2009 கல்கேரி தலித்கள் ஆலய நுழைவு போராட் டம், ஆதிக்க சாதி வெறியால் கொலை செய்யப்பட்ட கிளை செயலாளர் சி.சுரேஷ் குடும்பத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிஇது என்றார்.

நந்தீஸ்-சுவாதி
சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஆடு கொண்டப் பள்ளி நந்தீஸ் -சுவாதி குடும்பத்திற்கும் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத் தின் தொடர்ச்சியாக அந்த குடும் பத்திற்கும் உதவித் தொகை, வேலை, பசுமை வீடு நிலம் வழங்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.தோட்ட வேலை செய்து வந்த நிலையில் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்ட கல்கேரி திம்மராயப்பா குடும்பத்திற்கும் உதவித்தொகை, வீடு, நிலம் கொடுக்கவும் உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது. இதற்காக அரசாணைகள் விரைவில் பெற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்றும்  ஜெயராமன் தெரிவித்தார்.

;