அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
கோவை, ஆக. 18 - என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் ஆலை வாயில்கள் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். தமிழகத்தில் கோவை, சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட்டங் களில் தேசிய பஞ்சாலைக் கழகத் துக்கு சொந்தமான 7 பஞ்சாலை கள் உள்ளன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆலை கள் மூடப்பட்டன. இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றுபவர் களுக்கு பாதி சம்பளம் மட்டுமே, அதுவும் காலதாமதமாக வழங்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலைகளை முழுமையாக இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அது வரை முழு ஊதியம் வழங்க வேண் டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆக.17 ஆம் தேதி முதல் அனைத்து ஆலைகளின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பஞ்சாலை தொழிற் சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனடிப்படையில், கோவை முருகன் மில்ஸ் எதிரில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதனைத்தொடர்ந்து செவ்வாயன்று மில் ரோட்டில் உள்ள சிஎஸ் அண்ட் டபிள்யூ பஞ் சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு, எச்எம் எஸ்,எல்பிஎஃப், ஐஎன்டியூசி, எம் எல்எஃப், ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத் தடுத்த நாட்களிலும் இந்த போராட் டங்கள் தொடரும் என தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.