tamilnadu

img

ஆங்கிலம் கற்பது எளிதே

எழுத்துக்களைக் கோர்த்தால் சொற்கள். சொற்கள் பல வகைப்படும். Noun, adjective, adverb, verb, articles என பல வகைப்படும். இந்த ஒவ்வொரு வகையிலும், பல வகைகள் உண்டு. என்னடா ஆங்கிலம் பேசுவது மிகவும் எளிது என்று சொல்லிவிட்டு, இவர்களும் adjective, adverb என்று போகிறார்களே என்று நினைக்கத்தான் செய்வீர்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இவை என்ன என்று புரிந்து கொண்டால் மட்டும் போதும். 

இப்பொழுது நாம் ஒரு நோட்டு புத்தகத்தில் நிறைய வார்த்தைகள் எழுதி இருக்கிறோம் அல்லவா? அந்த வார்த்தைகள் ஆடு, மாடு கழுதை, குதிரை, குரங்கு, சிரங்கு, விலங்கு, விளக்கு, அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தம்பி, நிலவு, வானம், காதல் கவிதை என்று பலப்பலவாக இருந்திருக்கும். நீங்கள் எழுதிய வார்த்தைகளை படியுங்கள். 

ஆடு என்பதற்கு sheep அல்லது goat என்று எழுதியிருப்பீர்கள். மாடு cow; கழுதை donkey; குதிரை horse; குரங்கு monkey; சிரங்கு boil; விலங்கு animal; விளக்கு lamp or light; அப்பா father; அம்மா mother; அண்ணன் elder brother; தங்கை younger sister இப்படி, பல வார்த்தைகளை எழுதி இருப்பீர்கள். 

சிலவற்றை நம்மால் பார்க்க, தொட முடியும். ஆடு மாடு என்பவற்றை பார்க்க முடியும், தொட முடியும். வானம் பார்க்க முடியும். தொட முடியுமா? சூரியன் பார்க்க முடியும். தொட முடியுமா? காற்று, இசை, நட்பு, காதல், பாசம் உணர முடியும் யாரிடமாவது காண்பிக்க முடியுமா? விலை கொடுத்து வாங்க முடியுமா? இல்லை, இலவசமாகத்தான் வாங்க முடியுமா? உணர முடியும் அல்லது உணரச் செய்ய முடியும். பார்க்க மற்றும் தொட முடிகின்ற பொருட்கள் noun. உணர முடிகின்ற பொருட்களும் noun. மிக எளிதாக சொல்வதென்றால், எதற்கெல்லாம் பெயர் இருக்கிறதோ அவை எல்லாம் noun. 

சற்று நேரம் கடற்கரைக்குப் போவோமா? Sea, seashore, shell, ship, people, crowd, children, beach, sand, snacks, boat, net, fish, fisherman, lovers, salesman, cotton candy, waves, snail, crab இப்படி பல வார்த்தைகளை நாம் கடற்கரையில் அறிந்து கொள்கிறோம். Breeze, oxygen, air என்பது போன்ற வார்த்தைகளையும் நாம் அங்கே தெரிந்துகொள்ளலாம். பார்க்க முடிந்தாலும், பார்க்க முடியாவிட்டாலும், தொட முடிந்தா லும், முடியாவிட்டாலும், ஏதேனும் ஒன்றுக்கு பெயர் என்று ஒன்று இருந்தால் அது பெயர்ச்சொல். All naming words are nouns. இதில் பல வகைகள் உள்ளன. இவற்றைப் பற்றி பின்னர் தெரிந்துகொள்ளலாம். 

இப்போது நமக்குத் தெரிய வேண்டியது பெயர் இருந்தால் பெயர்ச்சொல் அவ்வளவே. Officeக்கு கிளம்ப வேண்டுமே. Time ஆகிவிட்டது. Bus பிடிக்க வேண்டும். தாமதமாகப் போனால் manager வேறு முறைப்பார். Work எல்லாம் கெட்டுப் போகும். Morning லேயே இப்படி என்றால் full day problem தான். Office, time, bus, manager, work, morning, day, problem இந்த வார்த்தைகள் எல்லாமே noun. இன்றைக்கு leave தான். என்னால் எழுத முடியும் என்று நினைப்பவர்கள் இதுபோல் பெயருள்ள வார்த்தைகளை எழுதலாம். எழுதும்போது ஒரு தலைப் பைப் போட்டுக் கொள்ளுங்கள். 

school. இது தொடர்பாக உங்களுக்கு தெரிந்த அனைத்து noun சொற்களையும் எழுதுங்கள்.

‌t, s, d, t, b, c, c, c, b, b, p, p, p, b, n, b, w, m, ‌பள்ளிக்கூடம் தொடர்பாக,சட்டென்று நினைவில் தோன்றக் கூடிய சில வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே noun. நீங்கள் கெட்டிக்கார students ஆயிற்றே. இதற்கு மேலும் பல வார்த்தைகளை எழுதி இருப்பீர்கள். 

‌Noun களுக்கு singular plural உண்டு. இதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைத் திருப்பிப் பாருங்கள். Child children, baby babies, cow cows, page pages ஞாபகம் வந்து விட்டதா? ஆங்கிலம் கற்பது எளிது. நமக்கு தெரிந்த வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்வது, புதிய வார்த்தைகளை அதன் உச்சரிப்போடும், அர்த்தத்தோடும் தெரிந்து கொள்வது போன்ற முயற்சிகள் ஆங்கிலம் கற்பதை மேலும் easyயாக்கி விடும்.

;