tamilnadu

img

செப்டம்பர் வரை ஊரடங்கு? இந்தியாவில் ஜூன் மூன்றாவது வாரத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும்

தில்லி 
இந்தியாவில் ஜூன் மூன்றாவது வாரத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும். மத்திய அரசின் செயல்பாட்டை பொறுத்தே ஊரடங்கை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும் ஜூன் இறுதியிலோ அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரத்திலோ தான் ஊரடங்கு நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் ஆய்வு (பிசிஜி) தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள செய்தியில்,இந்தியாவில் ஜூன் கடைசியிலோ செப்டம்பர் இரண்டாவது வாரத்திலோதான்  ஊரடங்கு உத்தரவு நீக்கப்படலாம். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் நோய்த்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மத்திய அரசின் கேபினட் செயலாளர், ராஜீவ்கபா, ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப்பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படாது எனக் கூறியுள்ளதையும் பிசினஸ் டுடே சுட்டிக்காட்டியுள்ளது.மணி கண்ட்ரோல்.காம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,  ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தேதி, முழு ஊரடங்கா? அல்லது பகுதி ஊரடங்கா? நோய் உச்சமடையும் காலம் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்து, எந்த நாட்டில், எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை அளித்துள்ளது.

அதில் ஜூன் மூன்றாவது வாரத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும். நான்காவது வாரத்தில் தணியும் என சுட்டிக்காட்டியுள்ளதோடு செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை ஊரடங்கு இந்தியாவில் நீட்டிக்க வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளது.ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாது கொரோனா தொற்று பரவியுள்ள நாடுகளில் இதன் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கும். ஊரடங்கு எவ்வளவு நாட்கள் நீட்டிக்கும் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

;