கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாநகரில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் 64 மையங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அபிஷேகபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.