tamilnadu

img

பாரம்பரிய கலைகளை கற்றுத்தரும் கலைஞர்கள்

இராமநாதபுரம்:

இராமநாதபுரம் அருகே கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட பல்வேறு தமிழர் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினருக்கு இலவசமாக தன்னார்வ குழு ஒன்று கற்பித்து வருகிறது. 


இராமநாதபுரம் அடுத்த கோரவள்ளி கிராமத்தில் சிலர், குழுவாக இணைந்து சிறுவர் சிறுமியருக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, சிலம்பாட்டம்,சுருள் வீச்சு, ஓவியம் என பலவகையான கலைகளை இலவசமாக கற்பித்து வருகின்றனர்.


பாரம்பரிய கலைகளை பயிற்றுவிக்கும் குழுவானது தங்கள் முன்னோர்களிடம் இருந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்தவர்கள். தங்களோடு இந்தக் கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில் சிறுவர் சிறுமியருக்கு இவற்றை பயிற்றுவிக்கின்றனர். அதிகாலை எழுந்து பள்ளி செல்வதற்கு முன் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பாரம்பரிய கலைகளை கற்றுவரும் சிறுவர் சிறுமியர், இது தங்களது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தைத் தருவதாகக் கூறுகின்றனர். 


தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் பயிற்சிக்கு அழைத்து வரும் பெற்றோர், இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் நல்லதொரு நிலையை அடைவார்கள் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர். 


;