tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர் ஆர்.சாவித்திரிக்கு வயது 80

வேலூர், ஆக. 3- வேலூர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்  தின் முன்னத்தி ஏர் தோழர் ஆர்.சாவித்தி ரிக்கு திங்களன்று (ஆக. 3) 80ஆவது பிறந்த நாள். அவருக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர் அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே மாதர் அமைப்பை இந்த மாவட்  டத்தில் பல கிராமங்களில் கட்டி வளர்த்தவர்.  மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகி, மத்தியக்குழு உறுப்பின ராக திறம்பட செயல்பட்டவர். கட்சியின் மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழுவில் பணியாற்றியவர். ஏராள மான பெண் தோழர்களை கட்சிக்கு கொண்டு  வந்தவர். அஞ்சல் ஓய்வூதியர் அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்டவர். மாவட்  டத்தில் செங்கொடி இயக்க முன்னோடிகள் கே.ஆர்.சுந்தரம்,  வே.கண்ணன் ஆகியோ ரோடு இணைந்து பணியாற்றியவர் கட்சி ஸ்தாபன செயல்பாட்டை முன்னெ டுக்க இன்றளவும் ஆலோசனைகள் வழங்கி  வருகிறார். மேலும் கட்சிக்கு இன்றளவும் உதவி வருவதோடு, தான் வாழும் இல்லத்தை யும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கி யுள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி கட்சியின்  வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயா நிதி, செயற்குழு உறுப்பினர்கள் ப.சக்திவேல்,  எஸ்டி.சங்கரி உள்ளிட்ட பல தோழர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த னர்.

;