tamilnadu

img

தீபாவளிக்கு 8 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகும்

சென்னை, அக். 12- அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்க ளுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்க ளில் வெளியாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி (ஞாயிறு) வருகிறது. அதற்கு முதல்  நாளான சனிக்கிழமை விடுமுறை என்ப தால், இந்த பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். விரைவு ரயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால், வழக்கமாக இயக்கப்ப டும் தென் மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. 

மேலும், காத்திருப்போர் பட்டியலில்  இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை யும் அதிகமாக உள்ளது. தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது.  இதற்கிடையே, வரும் தீபாவளியை யொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்க ளுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, தீபாவளியையொட்டி திருநெல்வேலி, கோயம்புத்தூர் நாகர் கோவில், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதி களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு  ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. இதில், கூடுதல் ரயில்கள் இயக்க வும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்க ளில் தெற்கு ரயில்வே இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

;