சென்னை, அக். 5- நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாக காணப்படும் ரெயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரெயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் ஆய்வு செய்து தூய்மையான மற்றும் அசுத்தமான முதல் 10 ரயில் நிலை யங்களின் பட்டியலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள் ளது. அசுத்தமான 10 ரயில் நிலை யங்களில் 6 ரயில் நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. சுத்தமான ரயில் நிலையங்கள் விபரம் வருமாறு:- ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்கா பிரா, தவாய், காந்தி நகர், சூரத்கர், உதய்பூர், அஜ்மீர், விஜயவாடா, ஹரித் வார்.
கிண்டி
நாட்டிலேயே மிகவும் மோச மான நிலையில் அசுத்தமாக காணப் படும் பட்டியலில் முதல் 10 இடங் களில் தமிழக ரயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முத லிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, தில்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில், பழ வந்தாங்கல் ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட், உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்ஜா ஆகி யவை அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தும் பராமரிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பது துரதிருஷ்டம்.