tamilnadu

img

தமிழகத்தில் 256 சார்ஜிங் மையங்கள்

சென்னை,ஜன.4- பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டுக்காக தமிழகத்தில் 7 இடங்களில் 256 சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மோட்டார் வாகனங்களால் ஏற்படும் புகை மாசுவை குறைக்க  பேட்டரி வாகனங்களை பயன்ப டுத்தும்படி மத்திய அரசு வலி யுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது 62 நகரங்களில் பேட்டரி  வாகனங்களுக்காக 2 ஆயிரத்து 636 ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கூறிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிர காஷ் ஜவடேகர், சார்ஜிங்’ மையங்  கள் அமைப்பதன் மூலம் மின்சார  வாகனங்களை பயன்படுத்துப வர்களின் நம்பிக்கை அதிகரிப்ப துடன், புதிய மின்சார வாகனங்கள்  அறிமுகம் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்று தெரி வித்துள்ளார். பேட்டரி வாகனங்களுக்காக தமிழகத்தில் 256 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக் கப்பட உள்ளன. அதன்படி, சென்  னையில் 141-ம், கோவையில் 25-ம், மதுரையில் 50 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர வேலூர், சேலம், ஈரோடு மற்றும் தஞ்சை யிலும் தலா 10 சார்ஜிங் மையங்கள்  அமைக்கப்பட உள்ளதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.

;