சென்னை, மார்ச் 13- வரும் கல்வி ஆண்டில் புதிதாக 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:- வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்ட மைப்பு வசதிகள் ரூ. 26 கோடியே 25 லட்சம் செலவில் செய்து கொடுப்பது டன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி கள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரி யர் பணியிடங்களும் உருவாக்கப்படும். 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்புக் கேமரா வசதி அமைத்து தரப்படும். வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்ப டும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
விளையாட்டு வளாகம்
இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் ரூ. 18 கோடி செலவில் அமைத்துத் தரப்படும். உள்ளரங்க விளையாட்டு களுக்கான மாநில அளவிலான ஒரு பயிற்சி மையம் ரூ. 12.30 கோடியில் 5 தளங்களைக் கொண்ட விளையாட்டு வளாகம், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அமைக் கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறி யியல் கல்லூரி மற்றும் 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி களில் உள்ள கட்டடங்களை மேம்ப டுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளவும், முதல்கட்டமாக இந்த ஆண்டு ரூ. 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை, சைதாப்பேட்டை கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்ட டம் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்புராதனக் கட்டடத்தினை, அதன் தொன்மை மாறாமல் புணரமைக்க ரூ. 10.20 கோடியில் பணிகள் மேற்கொள் ளப்படும். சென்னை, மாநிலக் கல்லூரியின் பழமை வாய்ந்த பல கட்டடங்களும், கல் லூரி முதல்வர் குடியிருப்பும், அதன் தொன்மை மற்றும் அழகு மாறாமல் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புணரமைத்து பாதுகாக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்தார்.