இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்து பாலூட்டும் ஒரு தாயிடமிருந்து தனது செல்பேசிக்கு வந்த ஒரு அழைப்பு பசியின் கொடுமையை உணர வைத்தது என்கிறார் ஜி.வெங்கடேஷ். இரண்டு நாட்களாக அந்த வீட்டில் உள்ள 6 பேர் பட்டினி கிடந்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த அந்த குடும்பம் தேவசந்திரத்தில் குடியிருக்கிறது. நாங்கள் இப்போது தினமும் இரண்டு வேளை உணவுப் பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். குழந்தைகளுக்கு சாக்லெட், முட்டை வழங்கினோம் என்றார் அவர்.