tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... மார்ச் 3

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற் றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலை பேசியைக் கண்டுபிடித்ததற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராத லினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்து சக்தியாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\

இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறு வனரும் ஆவார். அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவரு டைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவ ருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அலெக் சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70), எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக் சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரி யர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்ட னில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண் டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்ப வர்களாகத் திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசை வைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.

எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதான போது அவ ருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழி களைப் படிப்பதைவிட பியானோ வாசிப்ப திலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற் றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவ ரையே திருமணம் செய்துகொண்டார்.

பெரணமல்லூர் சேகரன்

;