tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

பார்வதி கிருஷ்ணன் சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராவார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது பிஏ (ஹானர்ஸ்) பட்டப்படிப்பை முடித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். டிசம்பர் 1942ல் என். கே. கிருஷ்ணனை மணந்தார். இந்தியத் தரைப்படை முதன்மைத் தளபதியாக இருந்த ஜெனரல் பி. பி. குமாரமங்கலமும், கம்யூனிஸ்ட் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மோகன் குமாரமங்கலமும் இவரது சகோதரர்கள்.

ஏப்ரல் 3, 1954ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 12, 1957 வரை அப்பதவியில் நீடித்தார். 1957 மற்றும் 1977 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974 ஆண்டின் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது மக்கள் பிரச்சனைகளை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திறம்பட முன்வைத்து வாதாடியவர்.

பெரணமல்லூர் சேகரன்

தோழர் பார்வதி கிருஷ்ணன் பிறந்த நாள் (மார்ச் 15)
 

;