tamilnadu

img

‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’ உலகளாவிய முழக்கம்

பல்வேறு நாடுகளில் தூதரகங்கள் முன்பு போராட்டம்

லண்டன், ஜுன் 2- அமெரிக்காவில் நிறவெறிகொண்ட காவல் அதிகாரியின் முழங்காலுக்கு கீழ் மூச்சுத் திணறி மரணமடைந்த கறுப்பின இளைஞர் ஜார்ஜ்  பிலாய்ட் கடைசியாக உதிர்த்த ‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’ என ஆங்கிலத்தில் கூறியது உலகம் முழுவதும் உயிர்பெற்று ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் வர்க்க- வண்ண வேறுபாடின்றி எல்லைகளைக் கடந்த ஒற்றுமை வாசகமாக ‘எனக்கு மூச்சுத் திணறுகிறது’ ஓங்கி ஒலித்து வருகிறது.  நியூசிலாந்தில் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் அமெரிக்க துணை தூதரகம் முன்பும், லண்டனில் அமெரிக்க தூதரகம் முன்பும்  நடந்த எதிர்ப்பு முழக்கங்கள் ஒரே சீராக ஒலித்தன. அமெரிக்க காவல்துறையினர் பிலாய்டை கைவிலங்கிட்டு வழியில் படுக்க வைத்ததுபோல் ஆக்லாந்த் துணை தூதர் அலுவலகம் முன்பு கைகளை பின்னால் கட்டி கவிழ்ந்து கிடந்து முழக்கமிட்டனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடத்த முடிவு செய்திருந்த போராட்டம் வலது சாரிகள் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. 

பிரான்சில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த அகாமா ட்ரோவரி என்கிற 24 வயது இளைஞரின் உறவினர்கள் செவ்வாயன்று அமெரிக்க எதிர்ப்பு போராளிகளுக்கு ஆதர வாக அணிதிரள்வதாக அறிவித்துள்ளனர். ஜெர்மனியில் பெர்லின் அமெரிக்க தூதரகம் அரு கில் போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றது மோதலுக்கு இட்டுச்சென்றது. ஜெர்மன், மத்திய ஜெருசலேம் போன்ற அரபு நாடுகளிலும் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம் வலு வடைந்து வருகிறது. லெபனானில் ‘அமெரிக்க ரிவால்ட்’ என்கிற ஹேஸ்டாக் ஒரே நாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் போராட்டத்தை கட்டுப்படுத்த அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 

கோவிட்டை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா வில் தொடங்கிய போராட்டம் உலகெங்கும் ஊட கங்களின் முக்கிய செய்தியாகி உள்ளது. சீனா, ஈரான், ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளி லும் ஊடகங்கள் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்கா ஹாங்காங்கில் செய்ததைப் போலவே அமெரிக்காவின் போராட்டத்தையும் சீனா ஆதரிக்க வேண்டுமா என்று சீனாவின் குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஹு சியாஜின்கேட்டார். இதற்கு பதிலளித்த ரஷ்ய தூதர், அமெரிக்காவில் உண்மையான மனித உரிமை பிரச்சினை வெளிவருகிறது என்று கூறினார். 

ஊடகத்தினர் மீது தாக்குதல்

ஜார்ஜ் பிலாய்ட் படுகொலையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடந்த போராட்டங்களின் போது பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செய்தி வழங்கிய பத்திரிகையாளர்களை காவல்துறை யினர் தேடிப்பிடித்து தாக்கியதாக குற்றச்சாட்டு கள் உள்ளன. காவல்துறையின் ரப்பர் குண்டு புகைப்படக் கலைஞர் லிண்டா டிராடோவின் இடது கண்ணின் பார்வையை பறித்துள்ளது. இதற் கிடையில், எதிர்ப்பாளர்கள் தீவிர வலதுசாரி ஊடகங்களின் பிரதிநிதிகளையும் தாக்கினர். காவல்துறை மற்றும் எதிர்ப்பாளர்கள் ஊடக வியலாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை அமெரிக்க பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (சிபிஜே) கண்டித்துள்ளது.
 

;