tamilnadu

img

உளவு பார்த்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 16 ஆண்டுகள் சிறை... 

மாஸ்கோ

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வீலன் (50) என்ற நபரை மத்திய பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். 

பரிசோதனை மற்றும் விசாரணையில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் எனத் தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்களையும், கணினி ஃபிளாஷ் டிரைவர் ஆகியவற்றை போலீசார்  பறிமுதல் செய்தனர். 

குறிப்பாக கணினி ஃபிளாஷ் டிரைவில் ரஷ்ய நாட்டின் உளவு ரகசிய தகவல்கள் இருந்துள்ளன. இந்த விவகாரத்தை ரஷ்ய அரசு ஆதாரங்களுடன் அந்நாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற நிலையில், இந்த உளவு குற்றச்சாட்டில் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான பால் வீலனுக்கு 16 ஆண்டுகள்  சிறை ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

;