tamilnadu

img

இந்நாள் மார்ச் 17 இதற்கு முன்னால்

1780 - இங்கிலாந்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த ஐரிய (அயர்லாந்து) மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக, அமெரிக்க விடுதலைப்போருக்கு, தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு நாள் விடுமுறை அறிவித்தார். 1779 நவம்பரிலிருந்து, 1780 மார்ச்வரை 28 தனித்தனி பனிப்புயல்களை, அமெரிக்க விடுதலைப்போரின் வீரர்கள் சந்திக்க வேண்டியி ருந்தது. அவர்கள் அதுவரை சந்தித்திராத கடுங்குளிர், சுமார் 6 அடி அளவுக்குப் பனிப்பொழிவை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் படையினர் வழக்கமாகக் குளிர்காலத்தில் முகாமிடும் நியூஜெர்சியிலுள்ள ஜாக்கி ஹாலோ என்ற பண்ணையில், குடிசைகளுக்குள் வைக்கோல்களின்மீது உறங்கி, பனியை எதிர்கொண்டனர். பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தால், உணவுப்பொருட்களும் வர முடியாமல், மரக் கிளைகளின் பட்டைகள் முதலான வற்றை வீரர்கள் உண்ணத் தொடங்கியிருந்தனர்.  வீரர்களின் மன உறுதியில் தொய்வு ஏற்படாமல் செய்யவேண்டிய கடமை வாஷிங்டன் முன்னிருந்தது.

1700களில் அமெரிக்காவில் குடியேறியவர்களில் ஐரியர்களே மிக அதிகமான வர்களாக இருந்தனர். நோர்மன்கள் காலத்தில், 1169இல் அயர்லாந்தையும் கைப்பற்றியிருந்தாலும், மீண்டும் எழுச்சிபெற்ற ஆங்கிலேயர்கள், ரோஜாக்க ளின்  போர்கள் உள்ளிட்ட உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தபின், அமெரிக்காவிற்குச் செல்லும்வழி என்பதால் வணிக முக்கியத்து வம் காரணமாக, அயர்லாந்தை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தொடங்கியிருந்த னர். 1767இல் அயர்லாந்து ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் டவுன்ஷெண்ட் (வரிச் சட்டங்களை இயற்றி அமெரிக்க விடுதலைப்போர் தொடங்கக் காரணமாக இருந்த டவுன்ஷெண்ட் அல்ல!), ஏற்கெனவே இருந்த அண்டர்டேக்கர் முறை யினை மாற்றி, முழுக்கட்டுப்பாட்டையும் இங்கிலாந்தின்கீழ்க் கொண்டுவந்தி ருந்தார்.

இதில் சினமுற்றிருந்த ஐரியர்கள், அமெரிக்க விடுதலைப்போரைப் பார்த்து, துணிவுபெற்று, இங்கிலாந்துக்கு எதிராகப் போராடத் தொடங்கியிருந்த னர். இது, அமெரிக்காவின்மீதான கவனத்தைச் சிறிது திசைதிருப்பியதுடன், அமெரிக்காவிற்கு இங்கிலாந்துப் படைகள் மேலும் வருவதில் குறுக்கீடுகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், ஐரியர்கள் கடைப்பிடிக்கும் புனித பேட்ரிக் திருநாளான, மார்ச் 17, அமெரிக்காவில் அதிகம் கடைப்பிடிக்கப்படாத நாளாக இருந்தாலும், ஐரியர்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு அமெரிக்கர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், அமெரிக்க விடுதலைப் போரில் ஈடுபட்டுள்ள ஐரிய வீரர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், வீரர்களுக்கு ஒரு  நாள் விடுமுறை அளித்தார் வாஷிங்டன். மற்றொரு நாட்டில் நடைபெறும் ஒரு போராட்டத்துக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாக இது அமைந்தது.

- அறிவுக்கடல்

;