tamilnadu

img

இந்நாள் மார்ச் 13 இதற்கு முன்னால்

1933 - பொருளாதாரப் பெரு மந்தத்தின்போது, அரசு உத்தர வுப்படி அமெரிக்கா முழுவதும் மூடப்பட்ட வங்கி கள், இன்று திறக்கப்பட்டன. 1929இல் அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் பெருமந்தத்தின் தொடக்கமாகக் குறிப்பிடப் பட்டாலும், உண்மையில், 1920களின் இடைப் பகுதியிலிருந்தே நிலவிய பின்னடைவுகள் காரணமாக, தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்பட்டன. வங்கிகள் தொடங்குவதற்கான மூலதனம் குறைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், நாடுமுழுவதும் செயல்படும் தேசிய வங்கிகளே வரைமுறையற்று வளர்ந்து, 1921இல் 31,000மாக உச்சத்தை எட்டியிருந்தன.

இவற்றால், அளவுகடந்த நம்பிக்கையில் வழங்கப்பட்ட கடன்களுடன், கட்டுமானம், சுரங்கம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல தொழில்துறைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, விவசாயம் பொய்த்தது முதலா னவை, இழப்பினை ஏற்படுத்தி, 1921-30 காலத்தில் 505 வங்கிகள் மூடப்பட்டி ருந்தன. தகவலே இன்றி பல வங்கிகள் காணாமல் போனமை, வங்கித் துறையின் மீதே நம்பிக்கையின்மையை உருவாக்கியிருந்த நிலையில், 1929இல் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சி மிகப்பெரிய பாதிப்பைத் தொடங்கிவைத்தது. வங்கியி லிருந்த பணத்தை மக்கள் அனைவரும் எடுக்கத் தொடங்க, மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 1933இல் 9,000 ஆகியது. பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்க மாநி லங்கள் 5 நாள், 8 நாள் என்று வங்கிகளுக்கு விடுமுறையளித்தாலும், பிரச்சனை தீரவில்லை.

இந்நிலையில்தான் மார்ச் 4இல் குடியரசுத் தலைவரான பிராங்க் ளின்-டி-ரூஸ்வெல்ட், மார்ச் 6இல் அமெரிக்கா முழுவதும் வங்கிகளுக்கு 4 நாள் விடுமுறையை அளித்தார். வங்கிகள் திறக்கப்படும்போது, மக்களுக்குத் திருப்பியளிக்கும் அளவுக்கு நாணயத்தாள்களை அச்சடிக்க உத்தரவிட்டதுடன், வங்கியிலிருக்கும் பணத்திற்கு 100 சதவீதம் காப்பீடு வழங்குவதாகவும் உறுதி யளித்த, வங்கித்துறை அவசரச் சட்டத்தை மார்ச் 9இல் நிறைவேற்றினார்.

காங்கி ரசின்(கீழவை) உறுப்பினர்களுக்கு வழங்கக்கூட பிரதிகள் தயாரிக்க நேரமின்றி, ஒரேயொரு பிரதியைப் படித்துக்காட்டியே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்களுக்குப்பின் சனி, ஞாயிறு முடிந்து, மார்ச் 13இல் வங்கிகள் திறக்கப்பட்டபோது, அனைவருக்கும் பணம் திருப்பியளிக்கப்பட்டதால் ஏற்பட்ட நம்பிக்கையில், இரண்டு வாரங்களுக்குள் எடுத்த பணத்தில் பாதியை மக்கள் மீண்டும் வங்கியிலேயே செலுத்தினர் என்பது தனிக்கதை. அவ்வாண்டின் ஜூன் மாதத்திலேயே அவசரச் சட்டத்திற்கு மாற்றான வங்கித்துறைச் சட்டம் இயற்றப் பட்டு, வங்கியிலுள்ள நிதிக்குக் காப்பீடு அளிக்கும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் தொடங்கப்பட்டது. பெருமந்தத்தின் விளைவுகள் தொடர்ந்தபோ தும்கூட, வங்கித்துறையில் நிலைத்தன்மை ஏற்பட இந்நடவடிக்கைகள் உதவின.

- அறிவுக்கடல்

;