tamilnadu

img

இந்நாள் மார்ச் 20 இதற்கு முன்னால்

1602 - முறைப்படி பட்டியலிடப் பட்டு, பங்கு விற்பனை செய்யப்பட்ட, உலகின் முதல் நிறு வனமான, வெரீனிட் ஊஸ்ட்-இண்டிச் கம்பெனி(விஓசி), அதாவது ஒருங்கி ணைந்த கிழக்கிந்திய கம்பெனி என்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கப் பட்டது. இதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கப்பட்டிருந்தாலும், சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு மாபெரும் நிறுவனமாக இதுதான் கோலோச்சியது. உண்மையில் இதற்கு இருபதாண்டுகளு க்கு முன்னரே, கடல்கடந்த டச்சு வணிகத்துக்கான நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. அவ்வாறான 12 நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்நிறுவனம் உரு வாக்கப்பட்டதால்தான் இதன் பெயரில் ‘யுனைட்டட்’ இடம்பெற்றது என்பதுடன், அந்த பழைய நிறுவனங்கள் வூர்-கம்பெனீன்(முன்-நிறுவனங்கள்) என்றும் குறிப்பிடப்படுகின்றன.  முதலில் இந்தியாவுக்கு வந்தவர்களான போர்ச்சுகீசி யர்கள், வணிகத்திற்கு நிறுவனங்களை அமைக்காத நிலையில், மாபெரும் நிறுவ னமாக வளர்ந்த இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.6-கோடி-கோடி! வணிகத்து டன், உற்பத்தி, கப்பல் கட்டுதல் என்று பல்துறையிலும் செயல்பட்ட குழுமமாக விளங்கிய இந்நிறுவனமே, பெரு நிறுவனங்களால் உருவாக்கப்படும் உலக மயத்திற்கான தொடக்ககால உதாரணம்!

இதற்காகப் பல்வேறு நாடுகளிலும் இது செய்த முதலீடுகளே, வெளிநோக்கிய(அவுட்வர்ட்) அந்நிய நேரடி முதலீட்டிற் கான மிகமூத்த உதாரணங்கள்! பங்குகள், பத்திரங்கள் முதலானவற்றை வெளியிட்டு, ஏராளமான நிதியைத் திரட்டிய இந்நிறுவனத்தின் பங்குகள், வாங்கி யும்-விற்கவும்பட்டு இரண்டாம் நிலை சந்தையை உருவாக்கியதால், இதுவே உலகின் முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனம். சுமார் அரை நூற்றாண்டுக்குப் பின்னரே, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்நிலையை அடைந்தது! தடையற்ற வணிகத்தைத் துப்பாக்கி முனையில் செயல்படுத்தியது,வணி கர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தது, லாபத்தைவிட வணிகத்தை விரிவாக்கு வதில் கவனம் செலுத்தியது உள்ளிட்ட விஓசியின் நடைமுறைகளைப் பின்னா ளில் கைக்கொண்டுதான், உலகின் மாபெரும் நிறுவனமாக, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி வளர்ச்சிடைந்தது. லாபத்திற்காக இயங்கும் வணிக நிறுவனம் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு நிறுவன அரசாங்கமாகவே செயல் பட்ட இந்நிறுவனத்தின் நிதிநிலைகள், 1780-84இல் நடைபெற்ற ஆங்கிலோ- டச்சு(இங்கிலாந்து-நெதர்லாந்து) போரில் மோசமானதைத் தொடர்ந்து, 1796இல் இது நாட்டுடைமையாக்கப்பட்டு, 1799இல் மூடப்பட்டது. இன்றைய நவீன பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாகக் குறிப்பிடப்படும் இந்நிறுவனமே, உலக வரலாற்றில் மிக அதிகமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்யப்பட்ட வணிக நிறுவனமாகும்!

- அறிவுக்கடல்

;