tamilnadu

img

இந்நாள் பிப். 01 இதற்கு முன்னால்

1893 - உலகின் முதல் திரைப்பட ஒளிப்பதிவு நிலையமான (ஸ்டுடியோ) ப்ளாக் மரி யாவை, தாமஸ் ஆல்வா எடிசன், நியூஜெர்சி மாநிலத்திலி ருந்த தன் ஆய்வக வளாகத்தில் கட்டி முடித்தார். அவர் உருவாக்கியிருந்த கைனெட்டாஸ்கோப் (துளையில் கண்ணை வைத்து, ஒருவர் மட்டும் காணக்கூடிய நிகழ்பட) கருவிக்காக, ஒளிப் பதிவுகளைச் செய்ய அவர் இதைக் கட்டினார். ஆனாலும், தொடக்ககால திரைப்பட ஒளிப்பதிவுகள் ஸ்டுடியோக்களில் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. மின்விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டபோதும், திரைப்பட ஒளிப்பதிவிற்குப் பயன்படுமளவுக்கு ஒளிதரும் விளக்குகள் இல்லாததால், வெளிப்புறத்திலேயே படம் பிடி க்கப்பட்டன. தமிழ்த் திரைப்படங்களை ஸ்டுடியோவுக்கு வெளியில் கொண்டுவந்தவர் பாரதிராஜாதான் என்று புகழப்படுவதுண்டு. ஆனால், திரைப்படங்கள் வெளிப் புறத்திலிருந்துதான் ஸ்டுடியோவுக்குள் சென்றன என்பது வினோதம். வில்லியம் டிக்சன் உள்ளிட்ட எடிசனின் முன்னாள் ஊழியர்கள் இணைந்து, எய்டலாஸ்கோப் என்ற ப்ரொ ஜெக்டரை உருவாக்கினர்.

திரையில் ஒரே நேரத்தில் பலரும் பார்க்கும் ப்ரொஜெக்டர்கள் உருவாகத் தொடங்கியதும், ஒருவர் மட்டும் பார்க்கும் கைனெட்டாஸ்கோப் தோற்றுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட, (சிறந்த வணிகரான!) எடிசன், சார்லஸ் ஜென்கின்ஸ் என்பவர் உருவாக்கியிருந்த ப்ரொஜெக்டரின் உரிமையை வாங்கி, தான் உருவாக்கியதாக, விட்டாஸ்கோப் என்ற பெயரில் விற்கத் தொடங்கினார். உண்மையில், அதற்கும் முன்பே, பாரிசில் லூமியர் சகோதரர்கள் கட்டணம் பெற்றுக் கொண்டு முதலில் படக்காட்சிகளையே காட்டியிருந்தாலும், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான காப்புரிமைகள் அனைத்தையும் எடிசனே வைத்திருந்தார். இதற்காக அவர், ‘அசையும் படக் காப்புரிமை நிறுவனம்’ என்றொரு நிறுவனத்தையே நடத்தி வந்தார். அவரிடம் வாங்காத கேமெராக்களைப் பயன்படுத்திப் படம் பிடிப்ப வர்களிடமிருந்து, கருவிகளை, அவரது பணியாளர்கள் பறிமுதல் செய்துவிடுவார்கள். இதனாலேயே, எடிசன் நிறுவனத்திற்கு அருகிலிருந்த நியூயார்க்கைத் தவித்துவிட்டு, லாஸ்ஏஞ்சல்சிஸ் ஸ்டுடியோக்களைத் தொடங்கின திரைப்பட நிறுவனங்கள். ஹாலிவுட்டின் பொற்காலம் என்று குறிப்பிடப்படும் முதல் அரை நூற்றாண்டுக் காலத்தில் திரைப்படங்கள் ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. திரையிடுதல், திரைப் படத் தயாரிப்பு ஆகியவை தனித்தனியானதும், தொலைக்காட்சியின் வரவும் ஸ்டுடி யோக்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்தன. 

;