tamilnadu

img

இந்நாள் பிப். 28 இதற்கு முன்னால்

1947 - தைவானில், 228 நிகழ்வு (பிப்ரவரி(2)-28) என்று குறிப்பி டப்படும் படுகொலைகளை, சியாங்-கை-ஷேக் தலைமையிலான சீன அரசு நிகழ்த்தியது. இந்தப் படுகொலையில் பலி யானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி லிருந்து, 28 ஆயிரம்வரை மதிப்பிடப்படுகி றது. 1894-95இல் நடைபெற்ற முதல் சீன-ஜப்பானியப் போரில் சீனா தோல்வி யடைந்தபோது, (போருக்குத் தொடர்பில்லாத பகுதியான!) தைவானை, வற்புறுத்திப் பெற்றுக்கொண்டது. ஜப்பானின் ஆளுகையை ஏற்காமல், தைவான் மக்கள் உரு வாக்கிய ஃபார்மோசா(போர்ச்சுகீசியர்கள் வந்தபோது தைவானுக்குச் சூட்டிய பெயர்) குடியரசை, 152 நாட்களில் ஜப்பான் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

ஜப்பானின் முதல் கடல்கடந்த குடியேற்றம் என்பதாலும், தைவான் மக்களைச் சமாதானப் படுத்தவேண்டும் என்பதாலும், பிற குடியேற்ற நாடுகள் வியக்கும் வண்ணம், ‘மாதிரிக் குடியேற்றமாக’ தைவானை மாற்றியது ஜப்பான். தைவானின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துறைமுகங்கள், ரயில் பாதைகள் என்று உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டன. ஜப்பான் ஆளுகைக்குமுன் 164 கி.மீ.யாக இருந்த சாலைகள், 4,456 கி.மீ.யாக உயர்ந்தன என்பது மட்டுமே, தைவான் அடைந்த வளர்ச்சியை விளக்கிவிடும். இதனால் ஜப்பானியர்களை ஏற்கத் தொடங்கிய தைவான் மக்கள், ஜப்பானியப் பெயர்களைச் சூட்டத் தொடங்கியதுடன், ஜப்பானிய மதமான ஷிண்ட்டோவையும் ஏற்றனர். ஜப்பான் ஏராளமாகத் தொடங்கிய பள்ளிகள், மாணவர்களிடையே, ஜப்பானிய ஆதரவு உணர்வை விதைத்தன. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் போது, பெரும்பாலான தைவான் மக்கள், ஜப்பானிய மொழியையே நன்றாகப் பேசு மளவுக்கு, ஜப்பானியர்களை ஏற்றிருந்தனர்.

இந்நிலையில்தான், போரின் முடிவில், ஜப்பான் தோற்றதையடுத்து, தைவானை நிர்வகிக்கும் பொறுப்பை, நேச நாடுகள் சீனாவிடம் வழங்கின. சீனாவின் ஆட்சியதிகாரத்தை முழுமையாகக் கட்டுப்பாட் டில் வைத்திருந்த கொமிண்ட்டாங் கட்சியினரும், அரசு அலுவலர்களும், சட்டவிரோத மாக சொத்துகளைப் பறிமுதல் செய்வது உட்பட ஏராளமான முறைகேடுகளில் ஈடு பட்டது. ஏற்கெனவே, ஜப்பானியருக்கு ஆதரவாக இருந்த தைவான் மக்களை போராடச் செய்தது. பிப்ரவரி 27இல் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் காவல்துறை சுட்டதில் காயமுற்றவர் மறுநாள் இறக்க, மிகப்பெரிய அளவில் கூடிய மக்களை பல்லாயிரக் கணக்கில் சுட்டுக்கொன்றதே இந்த நிகழ்வு. இதைத் தொடர்ந்து, அடுத்த 38 ஆண்டுகளுக்கு தைவானில் நீடித்த ‘வெள்ளைப் பயங்கரம்’ என்று அழைக்கப்படும் ராணுவ ஆட்சியே, உலகின் இரண்டாவது மிகநீண்டகால ராணுவ ஆட்சி!

- அறிவுக்கடல்

;