tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்... கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு...

காபூல்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு ஆதிக்கத்தை விட தலீபான்களின் ஆதிக்கம் அதிகம். தலீபான்கள்  மட்டுமல்லாமல் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றுவதற்காக அடிக்கடி தாக்குதலில் ஈடுப்பட்டு அப்பாவி மக்களை கொள்வது வழக்கம். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரான நூரிஸ்தானின் கவர்னராக இருப்பவர் ஹபீஸ் அப்துல் கய்யாம்.இவர் இன்று காலை தலைநகர் காபூலுக்கு சென்று கொண்டிருந்தார். மஹிபார் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது பாதுகாப்பு வாகனங்களை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்  திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.  

இந்த சம்பவத்தில் கவர்னருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த பாதுகாவலர் ஒருவர் பலியானார்.  மற்றொருவர் படுகாயமடைந்து உள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;