tamilnadu

img

மெக்சிகோவில் ரிக்டர் 5.6 நிலநடுக்கம் பதிவு

மெக்சிகோவில் இன்று எதிர்பாராத நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு மெக்சிகோவில் சனிக்கிழமை அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 32.3 கிலோமீட்டர் (சுமார் 20 மைல்) ஆழத்தில், பாஜா  கலிபோர்னியா மாநிலத்தின் எஸ்டாசியன் கோஹைலா (Estacion Coahuila) நகரிலிருந்து 68 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 
 

;