tamilnadu

img

சீனா, கம்போடியா, தாய்லாந்தில் புதிய மரணம் இல்லை

  • கம்போடியாவில் ஏப்ரல் 12க்குப் பிறகு புதிய கொரோனா பாதிப்போ அல்லது மரணமோ பதிவாகவில்லை என்றும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்துவிட்டனர் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • கொரோனாவுக்கு தடுப்பூசி வருகிறதோ இல்லையோ, அந்தவைரசுடன்தான் வாழ்ந் தாக வேண்டும்; இனியும் ஊரடங்கு நீடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 38 ஆயிரம் என்றஎண்ணிக்கையை கடந்திருக் கிறது. இந்நிலையில் உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை படிப்படியாக துவக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலில் ஜனாதிபதி பொல்சானரோவின் அராஜகமான நிர்வாகம் காரணமாக, அந்நாடு உச்சக்கட்ட கொரோனா பாதிப்பில்சிக்கியுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் நெல்சன்டீச் ராஜினாமா செய்துள்ளார். ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ள இரண்டாவது சுகாதார அமைச்சர் இவர்.
  • கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தமுடியாத அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப், அமெரிக்காவின் புதிய சூப்பர் டூப்பர் ஏவுகணை திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்.
  • கொரோனா தடுப் பூசியை உருவாக்கும் பணியில் இந்தியா வுடன் அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று டிரம்ப் கூறியுள் ளார். இந்தியாவுக்கு வென்டி லேட்டர்கள் சப்ளையிலும் உதவுவோம் என்றும் குறிப் பிட்டுள்ளார்.
  • சீனாவுடனான உறவு களை ஒட்டுமொத்தமாக துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் மிரட்டிய நிலையில், கொரோனா எதிர்ப்புப் போரில் இணைந்தே செயல்படுவோம் என்று சீன வெளி யுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
  • சீனாவில் கடந்த ஒரு மாதகாலமாக புதிதாக கொரோனா மரணம் எதுவும்பதிவாகவில்லை. 4,633என்ற கடைசி எண்ணிக்கை அப்படியே நீடிக்கிறது; தற்போது வெறும் 97 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரி வித்துள்ளது. 
  • சீனாவின் வுகான் நக ரில் உள்ள 1.1 கோடி மக்கள்அனைவருக்கும் கொரோனா பரிசோதனை 10 நாட்களில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இரண்டே நாட்களில் 30லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான்வெற்றிபெற்றால் டொனா ல்டு டிரம்ப் மீதான விசார ணைகளை தடுக்கவோ, அவரை மன்னிக்கவோ மாட்டேன் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ புடின் கூறியுள்ளார்.
  • அமெரிக்காவின் பென்சில்வேனி யாவில் உள்ள ஓவன்ஸ் அண்ட் மைனர் எனும் நிறுவனத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஆய்வு நடத்தச் சென்றார். முகக்கவசம் தயாரித்து விநியோகிக்கும் இந்த நிறுவனத்திற்கு டிரம்ப் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. 
  • சீனாவிலிருந்து வெளிநாட்டுக் கம்பெனிகள் முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தநிலையில், மிகப்பெரும் பாலான வெளிநாட்டு நிறு வனங்கள் சீனாவிலிருந்து முதலீடுகளை திரும்பப்பெற விரும்பவில்லை என்பதை உறுதிசெய்திருக்கிறார்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய் டாங் தெரிவித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணம் தவிர பிற பகுதிகளில் படிப்படியாக ஊரடங்குதளர்த்தப்பட்டு வருகிறது என அரசு தெரிவித்துள்ளது.
  • ஸ்லோவேகியா வில் ரோமா எனும் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மட்டும் கடைசியாக கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக இருந்து வந்தது. அந்தப் பகுதியும் இப்போது தனிமைப்படுத்தலில் இருந்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

  • கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு மற்றும் பல்லாண்டு காலமாக நடந்து வரும் உள்நாட்டு மோதல்களுக்கு இடையே 1993க்குப் பிறகுமுதல் ஜனாதிபதி தேர்தல் ஞாயிறன்று நடைபெறுகிறது.
  • லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா, பிரேசிலை ஒட்டியுள்ள தனது எல்லைப் பகுதியில் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பிரேசிலுடன்இணைந்து அதை எதிர் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
  • கனடாவின் விமான நிறுவனமான ஏர் கனடா,கொரோனா நெருக்கடி காரணமாக 60சதவீத ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியிருக்கிறது.
  • தாய்லாந்தில் கடந்த மார்ச் 9 முதல் புதிதாககொரோனா பாதிப்பு அல்லது மரணம் எதுவும்பதிவாகவில்லை என்றுஅரசு நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் தொழில் நிறு வனங்கள் கட்டுப்பாடின்றி படிப்படியாக  இயங்க அனு மதிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மிகக்கடுமையான  தொழில் நெருக்கடி ஏற் பட்டுள்ள பின்னணியில் சிறுதொழில்கள் மற்றும் சிறுவணிகங்களுக்கு வால்ஸ்ட்ரீட் வங்கிகள் கடன் உதவி செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளதாக  ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. 
  • கடுமையான கொரோனா காலத்தில் பலதொழில்கள் அழிந்துள்ளநிலையில் பேஸ்புக் நிறு வனம் மட்டும் பல மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. புதிதாக ஜிஃபி இணையதள நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதை தனது இன்ஸ்டாகிராம் நிறுவனத்துடன் இணைத் துள்ளது.
;