tamilnadu

img

மேலும் 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு....  மீண்டும் ஐரோப்பாவின் கொரோனா மையமாக மாறுகிறது ஸ்பெயின்... 

மாட்ரிட் 
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஐரோப்பா நாடான ஸ்பெயின் கொரோனா எழுச்சி பெற்ற அதிக சேதாரத்தை சந்தித்தது. குறிப்பாக மார்ச் மாத கடைசிலியிருந்து ஏப்ரல் மாத கடைசி வரை தினசரி பாதிப்பு 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் உலகின் கொரோனா மையமாக இருந்த ஸ்பெயின் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. 

பச்சை மண்டலம் பெறவில்லை என்றாலும் மே மாத கடைசியிலிருந்து ஜூலை முதல் வாரம் வரை தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வழக்கம் போல தங்களது இயல்பான பணியை தொடங்கினர். 
ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் மீண்டும் இரண்டாம் அலையை தொடங்கிய கொரோனா வைரஸ் தனது பரவல் வேகத்தை மீண்டும் அதிகரித்து இன்று வரை ஸ்பெயின் மக்களை மிரட்டி வருகிறது. நேற்று 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையின் புதிய உச்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 5,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3.49 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 26 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாத காலமாக ஐரோப்பாவின் கொரோனா மையமாக அதாவது தினசரி பாதிப்பில் அக்கண்டத்தின் முதல் நாடாக இருந்த ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

;