tamilnadu

img

குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்பு... மெக்ஸிக்கோவை மிரட்டும் கொரோனா... 

மெக்ஸிகோ சிட்டி 
அமெரிக்காவிற்கு அருகே உள்ள எண்ணெய் வளம் மிக்க முக்கிய நாடான மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஜூலை மாதத்திலிருந்து தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் மிக குறிகிய காலத்தில் மெக்ஸிகோ உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 7,257 பேர் புதிய கொரோனா நோயாளிகளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3.31 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் 736 பேர் பலியாகிய நிலையில், இதுவரை அங்கு 38 ஆயிரத்து 310 பேர் பலியாகியுள்ளனர். 2.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளை போன்று  போன்று குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்பு சந்தித்துள்ள மெஸ்க்ஸிகோ உலகின் கொரோனா உயிரிழப்பு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

;