tamilnadu

img

லெபனான் வெடிவிபத்து... சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா.... 

பெயரூட் 
ஆசியக்கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள லெபனான் நாட்டின் தலைநகர் பகுதியான பெயரூட் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருளான அம்மோனியம் நைரேட் திடீரென வெடித்தது.  உலகளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த வெடிவிபத்தில் 130-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்ததாகவும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 

அரசின் அலட்சியத்தால் தான் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. அதனால் ஜனாதிபதி மைக்கேல் அவுன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் வன்முறையும் நிகழ்ந்து வருகிறது. இதனால் லெபனான் கலவர காவல்படை இரவுபகலாக போராட்டத்தை கலைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள்  போராட்டம் காரணமாக 9 நாடாளுமனற உறுப்பினர்கள், தகவல் தொடர்பு அமைச்சர் மனால் அப்தெல், சுற்றுச்சூழல் அமைச்சர் டமியானோஸ் கட்டார் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துனர். 

இந்நிலையில் அந்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் மரி கிளாட்-டும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் பதவி விலகிய அமைச்சர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  

;