tamilnadu

img

கொரோனா பாதிப்பில் 5 வது இடத்pதிற்கு மாறியது இந்தியா

உலகில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 5வது இடத்திற்கு மாறி உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9983 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 256611 ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை 7135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125381பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 124095 பேர் குணமடைந்துள்னர். 
ராஜஸ்தானில் மேலும் 262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 10,599 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மராட்டியத்தில் நேற்று  மேலும் 3,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக உயர்ந்துள்ளது. . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,314 பேர் குணமடைந்துள்ளனர் - 

டெல்லியில்  ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 28,936 ஆக அதிகரிப்பு கொரோனாவிலிருந்து 10,999 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ளனர்
 

;