tamilnadu

img

கடந்த போட்டியில் இந்தியா 16 பதக்கங்கள் வென்றதால் எரிச்சல் 2022 காமன்வெல்த் போட்டியில் ‘துப்பாக்கிச்சுடுதல்’ நீக்கம்

புதுதில்லி,ஜூலை 28-   கடந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் இந்தியா 16 பதக்கங்கள் வென்றதால் 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடை பெறுகின்ற காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு நீக்கப் பட்டுள்ளது. ஆகையால் இப்போட்டி யில் பங்கேற்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இங்கிலாந்தில் 2022-ல் நடை பெறவுள்ள காமன்வெல்த் போட்டி களில் பங்கேற்க வேண்டாம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜஜுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவுக்கு 1947-லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தெரிந்துகொள்ள வேண்டும். உலகின் ஐந்தவாது பலமிக்க  பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். காமன்வெல்த் போட்டிகளில் ஏதேனும் ஒரு விளையாட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தினால் உடனடியாக அந்த விளையாட்டுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படுத்தப்படுகிறது. வேண்டுமென்றே அதன் விதிகளும் மாற்றப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவை தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் வரவேற்றுள்ளது. இதில் ஐஓஏ  எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்று தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கத்தின் செயலர் ராஜீவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.   2022 காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக நடைபெற்ற கூட்டமைப்  பில் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 3 புதிய விளையாட்டுகள் இணைக்கப்பட்டன. கடந்த 1966-ல் இருந்து துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு காமன்வெல்த் போட்டியில்  இடம்பெற்றிருக்கும் நிலை யில், 1970-இல் மட்டும் விலக்கு அளிக்கப் பட்டது.  கடந்த 2018 காமன்வெல்த் போட்டி யில் துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் இந்தியா 16 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் நாடுகளின் நிலை க்கு ஏற்ப மட்டுமே துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இடம்பெற்று வருகிறது என்று விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர்.

;